ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க.ேராட்டில் கல்யாண விநாயகர் கோவிலில் இருந்து சிறிது தூரத்துக்கு முன்பு சாக்கடை வடிகால் செல்கிறது. இதிலுள்ள கான்கிரீட் சிலாப் சரியாக மூடப்படாமல் திறந்த நிலையில் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் தவறி உள்ளே விழுந்து விட வாய்ப்பு உள்ளது. இது பேராபத்தை விளைவிக்கும். அதற்கு முன்பு கால்வாயின் கான்கிரீட் சிலாப்பை சரியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பிரபு, ஈரோடு.