பெங்களூரு ராஜ் பவன் அருகில் உள்ள சாலையில் பாதசாரிகள் சாலையை கடக்க வசதியாக சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் பிரதான சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சுரங்க நடைபாதையை அந்த பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் பலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த திடீர் கனமழையால், அந்த சுரங்க நடைபாதைக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் அதை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் தவித்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் அந்த நடைபாதையில் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.