ஓசூர் உழவர் சந்தையில் மஞ்சள் பை வழங்கும் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. எந்திரம் நிறுவப்பட்டு 2 நாட்கள் மட்டுமே செயல்பட்டது. மேற்கொண்டு புதிய பைகள் நிரப்பப்படாததால் பயன் இல்லாத நிலையில் இருப்பதுடன் மின்சாரமும் வீணாகிறது. உழவர் சந்தைக்கு வரும் பொது மக்கள் பலர், மஞ்சள் பையை பெற அந்த எந்திரத்தை நாடி செல்வதும், பைகள் இல்லாததால் அவர்கள் ஏமாற்றமடைந்து நெகிழிப்பை தேடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த எந்திரத்தில் மஞ்சள் பையை நிரப்பி தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுப்பார்களா?
-சந்தோஷ், ஓசூர்.