கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் சாலையில் ஏரிக்கரை கிராமத்தின் அருகே கடந்த 2 ஆண்டுகளாக மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த சாலையில் தினமும் நூற்றுகணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. ஆனால் மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
-ராஜேஷ், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.