கிருஷ்ணகிரி நகரத்தில் பஸ் நிலையத்தை ஒட்டியவாறு மாவட்ட மைய நூலகம் அமைந்துள்ளது. இந்த நூலகத்தில் போட்டி தேர்வுக்கு படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தினந்தோறும் வந்து படித்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும் வளாகத்தின் முன் உள்ள மரங்களின் நிழலில் அமர்ந்து சாப்பிடவும் செய்கின்றனர். இந்த நிலையில் சுற்று வட்டாரத்தில் உள்ள கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் மாடுகளை தினந்தோறும் நூலகத்தின் முன் மரங்களிடையே கட்டி விடுகின்றனர். இதனால் சுகாதார கேடு ஏற்படுவதுடன், நூலகத்திற்குள்ளும் கால்நடைகளின் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சந்தோஷ், கிருஷ்ணகிரி.