ரேஷன் கடையை முறையாக திறக்க கோரிக்கை

Update: 2023-02-22 16:36 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் காரக்குப்பம் ஊராட்சி கொட்லேட்டி கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடை வாரத்தில் வெள்ளி, சனி ஆகிய 2 நாட்கள் மட்டும் செயல்படும். இந்த கடைக்கு கொட்லேட்டி, ஏர்கேட், ஆகிய பகுதிகளை சேர்ந்த 250 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த ரேஷன் கடை குறிப்பிட்ட நாட்களில் சரியாக திறப்பதில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரேஷன் கடையை முறையாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தோஷ், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்