நாய்கள் தொல்லை

Update: 2022-07-20 11:38 GMT


திருவாரூர் பகுதியில் நாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கூட்டம் கூட்டமாக சுற்றி தெரியும் நாய்களால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் திடீரென சாலையை கடக்கும் நாய்களால் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். மேலும் அருகில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் கோழி, ஆடுகளை நாய்கள் கடித்து விடுகின்றன. இதனால் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிகரித்து வரும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருவாரூர்

மேலும் செய்திகள்