பன்றிகள் தொல்லை

Update: 2022-07-20 11:36 GMT


திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா திருவீழிமிழலை ஊராட்சியில் திருவீழிமிழலையில் பன்றிகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. குறிப்பாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குழந்தைகள் நல மையம் போன்ற இடங்களில் ஏராளமாக சுற்றி திரிகின்றது. மேலும் சாலையில் குறுக்கே பன்றிகள் திரிவதால் அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும், மேலும் பன்றி வளர்ப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவீழிமிழலை.

மேலும் செய்திகள்