நாணல் செடிகள் அகற்றப்படுமா?

Update: 2022-07-20 11:34 GMT


திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் வெண்ணாறு,கோரையாறு,பாமணியாறு ஆகிய ஆறுகள் உள்ளன.இந்த ஆறுகள் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. இந்தநிலையில் இந்த ஆறுகளில் ஆகாயதாமரைகள், நாணல்கள், செடிகள் மண்டிக் கிடக்கின்றன.இதன்காரணமாக வயல்களுக்கு நீர் விரைந்து பாய்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆறுகளில் முளைத்துள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள், நீடாமங்கலம்

மேலும் செய்திகள்