இடம் மாற்றம் வேண்டும்

Update: 2023-02-15 14:37 GMT


நாகை முதலாவது கடற்கைரை சாலையில் லாரி எடைபோடும் நிலையம் உள்ளது. இந்த பகுதியில் நெல், அரிசி மற்றும் இதர பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் எடை போடுவதற்காக சாலையில் வரிசையாக நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து எடை போடும் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை 

மேலும் செய்திகள்