தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த கெட்டுஅள்ளி கிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. அது முழுமையடையாமல் நான்கு ஆண்டுகளாக கட்டிட பணி பாதியில் நிற்கிறது. இந்தநிலையில் அந்த கட்டிடத்தில் சிலர் மது அருந்துவது, சூதாடுவது என கூடாரமாக மாறிவருகிறது. இதுபற்றி பல முறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட துறையினர் இதனை உடனடியாக பணியை தொடங்கி முடித்து அங்கன்வாடி மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-வை.முருகன், கெட்டுஅள்ளி, தர்மபுரி.