தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் பாழடைந்த ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அந்த கட்டிடத்தில் கண்ணாடிகள், கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் உடைந்து, விஷப்பூச்சிகளின் கூடாரமாக காட்சி அளிக்கிறது. இந்தநிலையில் நோயாளிக்கு சாலையோரம் அமர்ந்து சிகிச்சை அளிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுத்து சுகாதார நிலையத்தை புதுப்பித்து பயன்பாட்டுக்கொண்டு வரவேண்டும்.
-வினோத், ஏரியூர், தர்மபுரி.