பெங்களூரு வெளிப்புற சுற்றுவட்டச்சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ளது. இதனால் அப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் அங்குள்ள சர்ஜாப்புரா சாலையில் அமைந்திருக்கும் நடைபாதையில் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த சாலையை பாதசாரிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோ ஸ்டேண்டு போலவே பயன்படுத்தி வருகிறார்கள். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.