பெங்களூரு மில்லர்ஸ் சாலையில் நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையை சிறுவர்கள் உள்பட பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையின் ஒரு பகுதியில் சிறிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த பள்ளத்தால், பாதசாரிகள் அவதி அடைகின்றனர். மேலும், அவர்கள் கால் தவறி விழுந்து காயம் ஏற்படும் சம்பவங்களும் நடந்து வருகிறது. எனவே அதை தடுக்க நடைபாதையை சீரமைக்க வேண்டும்.