கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள வாய்க்காலில் கோரை புற்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. மேலும் இந்த வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கோரை புற்கள் மற்றும் குப்பைகளை அகற்றி வாய்க்காலை தூய்மைப்படுத்தி கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.