பெங்களூரு கொட்டிகேபாளையா பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் அருகே ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிடம் கட்டும் பணிக்கு பயன்படுத்தப்படும் ஜல்லிகற்கள், சிமெண்டுகள் பஸ் நிறுத்தத்தில் கொட்டி வைக்கப்பட்டு உள்ளதால் பயணிகள் பஸ் நிறுத்தத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இதனால் ஜல்லிகற்ள், சிமெண்டுகளை அகற்றுவதுடன் அங்கு மீண்டும் கொட்டாதவாறு தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.