நாகை மாவட்டம் ஆசாத்மார்க்கெட்டில் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் மார்க்கெட்டு வரும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதன்காரணமாக இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை உடனுக்குடன் அள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நாகை