அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம்

Update: 2023-01-22 15:04 GMT

சேலம் ஊராட்சி ஒன்றியம் சேலத்தாம்பட்டி ஊராட்சியில் 2-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் அப்பகுதியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த கட்டிடம் மிகவும் பழமையானதாகும். இந்த அங்கன்வாடி மையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் செடி, கொடிகள் வளர்ந்து, விஷ ஜந்துக்கள் தொல்லை அதிகரித்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா?

--ரவிக்குமார், சேலத்தாம்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்