கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் சமீபத்தில் சாலைகள் சீரமைக்கப்பட்டதுடன் இருபுறமும் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கும் பணியும் நடந்தது. ஆனால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஊத்தங்கரை பகுதிகளில் சாலைகளின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்காமல் உள்ளனர். இதனால் இரு திசைகளிலும் பயணிக்கும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி மோதி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சாலைகளை சீரமைக்கும் பணி முடிவடையும் முன்பு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்பதே வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சந்தோஷ், மத்தூர், கிருஷ்ணகிரி.