சேலம் சர்க்கார்கொல்லப்பட்டி பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அவர்களால் பறிமுதல் செய்யப்பட்ட லாரி உள்ளிட்ட வாகனங்கள் அதே பகுதியில் உள்ள சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் தற்போது மிகவும் பழுதடைந்து அதை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இந்த வாகனங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏலம் விடுவதற்கோ அல்லது அங்கிருந்து அகற்றுவதற்கோ விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி, சேலம்.