தர்மபுரி மாவட்டம் அரூர்- தீர்த்தமலை செல்லும் சாலையில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு மின்வாரிய ஊழியர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டது. இந்த வீடுகள் சேதமடைந்து குடியிருக்க முடியாத நிலை உள்ளது. அங்குள்ள வீடுகளை சுற்றி முட்புதர்கள் வளர்ந்து காடுபோல் காட்சி அளிக்கிறது. இந்த வீடுகளை சீரமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி, தர்மபுரி.