தஞ்சையில் காமராஜ் காய்கனி மார்க்கெட்டில் 200 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த கடைகள் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த நிலையில் போதுமான கழிப்பிட வசதிகள் இல்லாததால் பொதுமக்களும், வியாபாரிகளும் மார்க்கெட்டின் வட மேற்கு பகுதியின் சுவரினை ஒட்டியுள்ளபகுதியில் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் அருகில்உள்ள குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்கரன்,தஞ்சை.