வல்லன்குமாரன்விளை சாலையோரம் ஆத்தங்கரை கால்வாய் பாய்கிறது. இந்த கால்வாயில் தற்போது செடிகொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் கால்வாயில் தண்ணீர் பாய்தோட முடியாமல் தேங்கி நிற்கிறது. மேலும், பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளின் நடமாட்டமும் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய்யை தூர்வாரி தண்ணீர் பாய்ந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.