நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள புகழ்பெற்ற அறப்பளீஸ்வரர் கோவில், நீர்வீழ்ச்சிகள், பூங்கா, படகு சவாரி போன்ற பல்வேறு பகுதிகளை கண்டு ரசித்து வருகின்றனர். சோளக்காட்டில் பயணியர் தங்கும் விடுதி வளாகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பாக தொலைநோக்கு கருவி இல்லம் கட்டப்பட்டது. அந்த இல்லம் தற்போது பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது. எனவே இந்த தொலைநோக்கு கருவி இல்லத்தை சீரமைத்து, திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஜேம்ஸ், சோளக்காடு, நாமக்கல்.