பழைய தாலுகா அலுவலக சுற்றுச்சுவரை அகற்றுவார்களா?

Update: 2025-12-28 18:15 GMT

வாலாஜா பஸ் நிலையம் எதிரே பழைய தாலுகா அலுவலகம் பாழடைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலுவலக வளாகத்தில் பல அரசு அலுவலகங்கள் தனித்தனி கட்டிடங்களில் செயல்பட்டன. அனைத்து அரசு கட்டிடங்களுக்கும் பொதுவாக பெரிய அளவில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இப்போது பழைய தாலுகா அலுவலகத்தில் இருந்த அரசு அலுவலகங்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு விட்டன. இதனால், பழைய தாலுகா அலுவலக சுற்றுச்சுவர் பயனற்று போய்விட்டது. அந்தச் சுற்றுச்சுவரையொட்டி ஆக்கிரமிப்புகள் உள்ளன. எனவே, இங்கு சுற்றுச்சுவரை அகற்றி அங்குள்ள கழிவுநீர் கால்வாயை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

-நடேசன், வாலாஜா.

மேலும் செய்திகள்