வாலாஜாவை அடுத்த தகரக்குப்பம் கிராமத்தில் இருந்து பொன்னப்பந்தாங்கல் கூட்ரோடு போகும் வழியில் வாங்கூர் ஊராட்சி அசோகபுரத்தில் உள்ள பஸ் நிறுத்த பயணிகள் நிழற்கூடத்தில் இரவில் மதுபானப்பிரியர்கள் மதுபானத்தை குடித்து விட்டு பயணிகள் காத்திருக்கும் பகுதியில் காலிபாட்டில்களை உடைக்கின்றனர். இதனால் அங்கு, பஸ்சுக்காகக் காத்திருக்கும் பயணிகளின் காலில் குத்தி காயத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-சோமசேகர், தகரக்குப்பம்.