திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராம மெயின் ரோட்டில் பல்லாவரம் கிராமம் செல்லும் சாலையில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. தெருக்களில் நாய்கள் தொல்லை இருப்பதால் நடந்தும், சைக்கிள், மோட்டார்சைக்கிள்களில் செல்வோரை நாய்கள் பின்னால் துரத்தி செல்கின்றன. பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர்-சிறுமிகளை நாய்கள் கடிக்க பாய்கின்றன. நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தரமூர்த்தி, தூசி.