கே.வி.குப்பம் பஸ் நிலையத்தில் மேற்கூரை அமைக்கும் பணியின்போது ஏற்கனவே இருந்த கட்டணக்கழிவறை தற்காலிக மூடப்பட்டது. தற்போது பணி முடிந்து சில மாதங்கள் ஆகிறது. ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து அடுத்த பஸ் வரும் வரை காத்திருந்து செல்லும் நிலையில், பாதுகாப்பான கழிப்பறை இல்லாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர். ஆண்கள் கழிவறைக்காக திறந்தவெளியைப் பயன்படுத்துகின்றனர். அங்கு மூடிக்கிடக்கும் இலவச அல்லது கட்டணக் கழிவறையில் ஏதேனும் ஒன்றை திறப்பார்களா?
-கிருஷ்ணவேணி, கே.வி.குப்பம்.