செங்கம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாலை நேரத்தில் போதை நபர்கள் மற்றும் சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டுகிறார்கள். இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே மது போதையில் வாகனங்களை ஓட்டும் நபர்கள் மீதும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் அதி வேகமாக வாகனங்களை இயக்கும் சிறார்கள், கல்லூரி மாணவர்களை வாகன தணிக்கையில் கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துராஜா, செங்கம்.