காவேரிப்பாக்கம் ஒன்றியம் புதுப்பட்டு கிராமத்தில் தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் சுற்றுச் சுவர் கட்டாமல் உள்ளது. இரவில் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. பள்ளி மாணவ-மாணவிகள் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தருவார்களா?.
-பழனிவேல், புதுப்பட்டு.