காட்பாடி தாலுகா பொன்னை போலீஸ் நிலையம் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அதில் பொன்னை, பொன்னைபுதூர், எஸ்.என்.பாளையம், பி.என்.பாளையம், தெங்கால், பரமசத்து உள்பட 30-க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவிகளும் படிக்கின்றனர். பள்ளியில் மாணவிகள், ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கு தனித்தனியே கழிவறைகள் உள்ளன. அதில் ஆண் ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிவறையில் மரத்தின் சருகுகள் நிறைந்து காணப்படுகிறது. ஆசிரியர்களுக்கு முறையான கழிவறை கட்டித்தரப்படுமா?
-தளவாய்சுந்தரம், காட்பாடி.