ஆரணி-வந்தவாசி நெடுஞ்சாலையில் கல்லேரிப்பட்டு ஊராட்சியில் பஸ் பயணிகள் நிழற்குடை உள்ளது. அங்கு இரவில் மதுபானம் குடிக்கும் நபர்கள் காலிப்பாட்டில்களை உடைக்கின்றனர். சமூக விரோத செயல்களும் நடக்கிறது. அங்கு பஸ் ஏற வந்து காத்திருக்கும் மக்களின் கால்களில் கண்ணாடிகள் குத்தி காயத்தை ஏற்படுத்துகின்றன. பஸ் பயணிகள் நிழற்குடை மது பிரியர்களின் கூடாரமாக மாறி வரும் அவல நிலையை ஊராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.
-ராகவேந்திரன், கல்லேரிப்பட்டு.