கிருஷ்ணகிரி அருகே தேவசமுத்திரம், அகசிப்பள்ளி, கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள பகுதிகளில் பன்றிகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த பன்றிகள் கூட்டம் கூட்டமாக அந்த பகுதிகளில் உள்ள குட்டைகளில் இறங்கி சுற்றித்திரிகின்றன. இதனால் குடியிருப்பு பகுதிகளிலும் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மேலும் சுற்றுப்புற பகுதிகளில் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பன்றிகளை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜேஷ், கிருஷ்ணகிரி.