சாக்கடை கால்வாய் விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2022-12-07 16:51 GMT

சேலம் மாவட்டம் 11-வது வார்டு பொன்னமாபேட்டை தில்லை நகர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி முதல் பொன்கணபதி கோவில் வரை உள்ள சாலையில் சாக்கடை கால்வாய் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. சாக்கடை கால்வாய் அமைக்க தோண்டிய குழிகள் சரியாக மூடப்படாததால் சாலை முழுவதும் மேடும் பள்ளமுமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வெங்கடேஷ். ஜெ.பொன்னமாபேட்டை, சேலம்.

மேலும் செய்திகள்