திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட விசுவை தெற்கு- பாலகிருஷ்ணம்பட்டிக்கு இடையே எதுமலுடையான் கோவில் அருகே ஓடும் அய்யாற்றை கடந்து செல்ல இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழை பெய்யும்போது ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதினால் அவர்கள் ஆற்றின் அடுத்த பக்கத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அய்யாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.