கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த வேம்பள்ளி கிராமத்தில் தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் பள்ளி வளாகத்தில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் மது அருந்துவது உள்ளிட்ட தீய செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டி தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-நாகராஜ், வேம்பள்ளி, கிருஷ்ணகிரி.