கிணற்றுக்கு மூடி அமைக்கப்படுமா?

Update: 2022-07-17 17:19 GMT

தர்மபுரி அடுத்த ஏரியூர் அருகே ராமகொண்டஅள்ளி ஊராட்சி புதுசோளப்பாடியில், ஊரின் மையப் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பொது கிணறு அமைக்கப்பட்டது. இந்த கிணறு திறந்தவெளியில் இருப்பதால் குப்பைகள் கொட்டும் கிணறாக மாறி உள்ளது. இதனால் கிணற்று நீர் அசுத்தமாகி துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே கிணற்றுக்கு மூடி அமைத்து பராமரிக்க வேண்டும்.

-முருகன், புதுசோளப்பாடி, தர்மபுரி.

மேலும் செய்திகள்