கிருஷ்ணகிரி மாவட்டம் பாலேப்பள்ளி ஊராட்சி எலத்தகிரி பெருமாள் கோவில் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதன் அருகில் தனியாருக்கு சொந்தமான கிணறு ஒன்று பாழடைந்து உள்ளது. இதில் தேங்கியுள்ள தண்ணீரில் கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் தண்ணீர் மாசடைந்து நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த கிணற்றை மூட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
-முருகன், பர்கூர், கிருஷ்ணகிரி.