சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலின் முகப்பு நுழைவாயிலின் எதிரே ஒரு மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் இரண்டு பக்கமும் பொதுமக்கள் செல்வதற்காக நடைபாதை உள்ளது. இதில் வலது பக்கம் உள்ள பாதையில் குப்பைகள், கழிவுநீரை கொட்டி வருகிறார்கள். மேலும், மண்டபத்தில் சிலர் அமர்ந்து மது குடித்துவிட்டு பாட்டில்களைஅங்கே போட்டுவிட்டு செல்கிறார்கள். இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு குப்பைகளை கொட்டுபவர்கள், மது குடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.முரளி, சுசீந்திரம்.
-ஆர்.முரளி, சுசீந்திரம்.