கான்கிரீட் சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-09 13:54 GMT

கான்கிரீட் சீரமைக்கப்படுமா?

மழைநீர் வடிகால் திட்டப்பணிகள் தஞ்சை நகரில் பல இடங்களில்நடைபெற்று வருகிறது. தஞ்சை-நாகை சாலை தொல்காப்பியர் சதுக்கம் பெட்ரோல் பங்க் எதிரில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் கான்கிரீட் தளம் இரு புறங்களிலும் 5 அடிக்கு உள்வாங்கிய நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதிமக்கள் வாகனங்களில் செல்லும் போது நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகால் கான்கிரீட் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,

மேலும் செய்திகள்