தஞ்சாவூர் மாநகராட்சி பிலோமினா நகரில் பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். குப்பைகள் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கி உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை