ஓசூர் நகரின் மையப்பகுதியில் உள்ள உழவர்சந்தைக்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். மேலும் வாகனங்கள் அதிகளவில் செல்லும் சாலையில் உழவர்சந்தை எதிரே சாலையின் நடுவே மாடுகள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாகவும், அச்சத்தை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-வி.விஜேந்திரன், சிவசக்திநகர், ஓசூர்.