கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெக்கெரி ஊராட்சி சின்னட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சிமெண்டு களம் அமைக்கப்பட்டது. அந்த சிமெண்டு களம் சேதமடைந்து பயன்படுத்த முடியாமல் காணப்படுகிறது. மேலும் அந்த களத்தை சிலர் மாடுகளை கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றி, சிமெண்டு களத்தை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-வீரா, சின்னட்டி, கிருஷ்ணகிரி.