கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டஅள்ளியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இ்ங்கு 60 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் மழைக்காலங்களில் பள்ளியை சுற்றிலும் மழைநீர் தேங்கியும், பள்ளி செல்லும் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் வாகனங்களில் செல்வோர் வழுக்கி விழுந்து விபத்தும் ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பள்ளியை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை அகற்றி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி, மிட்டஅள்ளி, கிருஷ்ணகிரி.