அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தூய்மை பணியை மேற்கொள்ளும்போது பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் தூய்மை பணியை மேற்கொள்வதால் இவர்களால் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் அவர்களுக்கும் நோய் தாக்கும் சூழல் உள்ளதால் கையுறை, கால்உறை, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி தூய்மை பணியை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.