கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை பேரூராட்சியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இரவு நேரத்தில் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கின்றன. கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் அந்த தெருநாய்களால் காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு மிக தொல்லை தருகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும்.
-விஸ்வநாத், தேன்கனிகோட்டை, கிருஷ்ணகிரி.