கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே மதுபான கடையில் மது வாங்கி வந்து அருகே உள்ள காலி இடத்தில் மது குடிக்க மது பிரியர்கள் அதிகளவில் கூடுகின்றனர். குடித்து விட்டு காலி பாட்டில்களை உடைத்துவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த வழியே செல்லும் பயணிகள், பொது மக்கள் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆறுமுகராஜ், கிருஷ்ணகிரி.