அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2022-10-09 16:59 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகள் முற்றிலும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இப்பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சாக்கடை கால்வாய்களும் முறையாக பராமரிக்கப்படாமல் தேங்கி கொசுக்களும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஊர்பொதுமக்கள், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகரி.

மேலும் செய்திகள்