காம்பவுண்டு சுவர் அமைக்கப்படுமா?

Update: 2022-10-05 14:47 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து கல்லாவி வழியாக தர்மபுரி செல்லும் சாலையில் கல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராம மக்களுக்கு சுடுகாடு கல்லாவி சாலை ஓரத்தில் அமைந்துள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய வருபவர்கள் சாலையோரம் அமர்ந்து உள்ளனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சுடுகாட்டிற்கு காம்பவுண்டு சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சுகுமார், கல்லூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்