வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2022-07-15 15:25 GMT

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் புதுப்பட்டி கிராமத்தில் வடிகால் செல்கிறது. இந்த வடிகால் வாய்க்கால் சுத்தம் செய்யப்படாமல், குப்பை கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது மேலும் வாய்க்காலில் விச பூச்சிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த விச பூச்சிகள் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்காலை தூர் வாரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் புதுப்பட்டி

மேலும் செய்திகள்